கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது-மத்திய சுகாதார அமைச்சகம்
கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்துவருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஊடகத்துறையினரிடம் பேசிய சுகாதார அமைச்சகத்தின் சிறப்பு அதிகாரி ராஜேஷ் பூஷண், இந்தியா போன்ற மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் கொரோனா தடுப்புப் பணியில் மத்திய மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளாலும் மக்கள் அளித்த ஒத்துழைப்பினாலும் தினசரி கொரோனா விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். நாளுக்கு நாள் நோய் பாதிப்பு குறைந்துவருவதாகவும் அவர் கூறினார்.
மார்ச் மாதத்தில் கோவிட் தினசரி பாதிப்புகள் 31 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தன. மே மாதத்தில் இவை 9 சதவீதமாக குறைந்தன. ஜூலை 12ம்தேதி நிலவரப்படி தினசரி பாதிப்புகள் சதவீதம் 3 புள்ளி 24 ஆக இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி 3 லட்சத்து 11 ஆயிரத்து 565 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் . 10 மாநிலங்களில்தான் 86 சதவீத பாதிப்புகள் இருப்பதாகவும் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார். இதில் மகாராஷ்ட்ராவும் தமிழ்நாடும் 50 சதவீத பாதிப்புகளுக்கு காரணமாக இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
கர்நாடகா, டெல்லி,ஆந்திரா ,தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், மேற்குவங்காளம், குஜராத், அஸ்ஸாம் மாநிலங்களில் 36 சதவீத பாதிப்புகள் கண்டறியப்பட்டிருப்பதாகவும் (மத்திய அமைச்சர்) தெரிவித்தார். நோயில் இருந்து குணமடைந்தோர் சதவீதமும் 63 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments