கொரோனாவால் உயிரிழந்தோர் இறுதிச் சடங்கிற்கு ரூ.15ஆயிரம் - ஆந்திர முதலமைச்சர் உத்தரவு

0 4403

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்தோரின் இறுதி சடங்கிற்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

ஆந்திராவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், இதுபற்றிய மறுஆய்வு கூட்டம் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்தோரின் இறுதி சடங்குகளை மேற்கொள்வதற்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்த முடிவை உடனடியாக அமல்படுத்தும்படி அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். ஆந்திராவில் கொரோனா வைரசுக்கு இதுவரை 365பேர் உயிரிழந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments