ராஜஸ்தான்: சச்சின் பைலட் இன்று அடுத்தகட்ட முடிவு

0 2626
ராஜஸ்தானில் துணை முதலமைச்சர் பதவியில் இருந்தும், காங்கிரஸ் கட்சிப் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்ட சச்சின் பைலட் இன்று அடுத்தகட்ட முடிவை அறிவிக்க உள்ளார்.

ராஜஸ்தானில் துணை முதலமைச்சர் பதவியில் இருந்தும், காங்கிரஸ் கட்சிப் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்ட சச்சின் பைலட் இன்று அடுத்தகட்ட முடிவை அறிவிக்க உள்ளார். 

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டிற்கும் இடையே அதிகாரப் போட்டியால் மோதல் வெடித்தது. இந்த நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ராஜஸ்தான் அமைச்சரவையில் இருந்தும், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட்டை நீக்க முடிவு செய்யப்பட்டது. மாநில கல்வித்துறை இணையமைச்சரான Govind Singh Dotasra, ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து முதலமைச்சர் அசோக் கெலாட், ஆளுநர் மாளிகை சென்று, ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்தார். சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகியோரை, அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு, முதலமைச்சர் அசோக் கெலாட் அளித்த பரிந்துரையை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஏற்றுக் கொண்டார். 

இந்த நிலையில் சச்சின் பைலட் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், உண்மை ஒரு போதும் தோற்காது என்று குறிப்பிட்டுள்ளார். தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாவும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே மாநிலத்தில் தற்போதுள்ள அரசியல் சூழல் பாஜக அலுவலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இன்று ஜெய்ப்பூரில் நடைபெற இருக்கும் பாஜக ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே கலந்து கொள்ள இருக்கிறார்.

இன்று காலை சச்சின் பைலட்டும் தமது அடுத்த கட்ட முடிவை அறிவிக்க உள்ளார். அவர் பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலையடுத்து பாஜக தலைவர்கள் சச்சின் பைலட்டுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நேற்றிரவு முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர்கள் பேருந்து மூலமாக சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments