ராமர் குறித்த சர்ச்சைப் பேச்சு.. வலுத்த கண்டனம்.. பின்வாங்கிய நேபாளப் பிரதமர்..!
ராமர் பிறந்த இடம் நேபாளத்தில் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலி எழுப்பிய சர்ச்சையை அடுத்து, எழுந்த கண்டனங்களால் அயோத்தியின் பெருமையை குறைக்கவில்லை என்று நேபாள அரசு விளக்கம் அளித்துள்ளது.
ராமரின் பிறப்பிடமாக கருதப்படும் அயோத்தி உத்தரப்பிரதேசத்தில் இல்லை என்றும்,உண்மையான அயோத்தி நேபாளத்தில் இருப்பதாகவும் சர்மா ஒலி கூறிய கருத்துக்கு இந்து மதத் தலைவர்களும் அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பாதிப்பை சரிசெய்ய அவசரமாக நேபாள அரசு ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. சர்மா ஒலியின் கருத்துகள் மத நம்பிக்கையை புண்படுத்தும் நோக்கத்துடன் கூறப்படவில்லை என்றும் அயோத்தியின் சிறப்பையும் பண்பாட்டு ரீதியாக அதற்கு உள்ள பெருமையையும் குறைத்து மதிப்பிடவில்லை என்றும் நேபாள அரசு தெரிவித்துள்ளது. நேபாள பிரதமரின் கருத்தை அடிப்படையற்ற , வரலாற்று ஆதாரம் இல்லாத வெறும் பேச்சு என்று இந்திய அரசும் அக்கருத்தை நிராகரித்துள்ளது.
Comments