12 மணி நேரம் நீடித்த இந்தியா - சீனா ராணுவ உயரதிகாரிகளின் அமைதிப் பேச்சுவார்த்தை
இந்தியா சீனா ராணுவ ஜெனரல்கள் இடையிலான நான்காம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நேற்று சூசல் எல்லைப் பகுதியில் 12 மணி நேரத்திற்கு நீடித்தது.
சீனப்படைகளை ஃபிங்கர் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 8 மலைச்சிகரங்கள் கொண்ட ஃபிங்கர் பகுதியில் படைகளைக் குறைப்பதுதான் இந்தியா சீனா இடையே மிகவும் சிக்கலான பிரச்சினையாக உள்ளது.
கடந்த முறை நடத்தப்பட்ட பேச்சுகளை அடுத்து கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதைக் குறித்தும் ராணுவ உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆயுதங்கள், படைகளை படிப்படியாக எல்லையில் இருந்து விலக்குவது குறித்தும் இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தினர்.எல்லையில் பதற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று இருநாட்டு ராணுவத்தினரும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில் அதற்கான சூழலை உருவாக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
காலை 11.30 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 12 மணி வரை நீடித்தது. மிகவும் சிக்கலான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டதால் நேரம் நீடித்ததாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
Comments