கொரோனா பணியில் ஈடுபட்ட துணை வட்டாட்சியர் நோய் தாக்கி மரணம்!

0 11078

கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்டு, பலரது பாராட்டையும் பெற்ற மேற்கு வங்க துணை ஆட்சியர் தேவதத்தா ராய் கொரொனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் துணை ஆட்சியராகப் பணியாற்றி வந்தார், 38 வயதாகும் தேவதத்தா ராய். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஹூக்ளிக்கு அழைத்து வந்து, முகாம்கள் அமைத்துத் தங்க வைக்கும்  பணியை மேற்கொண்டு வந்தார். தொழிலாளர்களுக்கு வேண்டிய பணியை சிரத்தையுடனும் மனிதாபிமானத்துடன் செய்து வந்தார் ராய். சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம் பலரது பாராட்டையும் கவனத்தையும் பெற்றார் தேவதாத்தா.

இந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொண்ட  பரிசோதனையில் அவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இழந்துள்ளார் தேவதத்தா ராய். இந்த அதிர்ச்சி சம்பவம் பொதுமக்கள் மத்தியிலும், அவரது குடும்பத்திலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தேவதத்தா இறந்ததற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். அவரது குடும்பத்திடம் பேசி ஆறுதல் கூறியியிருக்கிறார்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments