அமெரிக்காவில் பள்ளிகள் திறக்கப்படுவதை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
அமெரிக்காவில், வழக்கத்தை விட கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் வேளையில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
விர்ஜினியா மாகாணத்தில் வாரந்தோறும் 2 தினங்கள் மாணவர்கள் பள்ளிக்கு வருமாறு வலியுறுத்தப்பட்டதை தொடர்ந்து, அம்மாகாணத்தின் கல்வி தலைமையகத்தின் முன் பதாகைகளை ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், கார் ஹாரனால் ஒருசேர ஒலி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிபர் டிரம்ப், பள்ளிகளை திறக்க மறுத்தால் வரிச்சலுகை மற்றும் உதவித்தொகை வழங்குவதை அரசு நிறுத்திவிடும் என எச்சரித்ததை தொடர்ந்து, கல்வி நிர்வாகங்கள் பள்ளிகளை திறக்க துவங்கியுள்ளன.
அமெரிக்காவில் பள்ளிகள் திறக்கப்படுவதை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் #US | #SchoolReopen https://t.co/vLotXSTbp7
— Polimer News (@polimernews) July 14, 2020
Comments