தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன் -வனிதா

0 4684

தனது தனிப்பட்ட வாழ்க்கையை கீழ்த்தரமாக விமர்சிப்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாக நடிகை வனிதா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

சூர்யாதேவி என்ற பெண்ணும், படத் தயாரிப்பாளர் ரவீந்திரனும் தன்னை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாக ஏற்கனவே சென்னை போரூர் காவல் நிலையத்தில் புகாரளித்த நடிகை வனிதா, அது தொடர்பான ஆவணங்களை தனது வழக்கறிஞருடன் வந்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வனிதா, பணம் சம்பாதிப்பதற்காக சூரியா தேவியும், படத்தயாரிப்பாளர் ரவீந்திரனும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்து வருகின்றனர் என்றார்.

தொடர்ந்து பேசிய வனிதாவின் வழக்கறிஞர் ஸ்ரீதர், வனிதாவை விமர்சித்த சூர்யா தேவி என்ற பெண் கஞ்சா வியாபாரி எனவும் அதற்கான ஆதாரம் போலீசாரிடம் டுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments