பிரான்சில் உருகும் பனிப்பாறைகளுக்கு இடையே கண்டுபிடிக்கப்பட்ட 1966ம் ஆண்டைச் சேர்ந்த இந்திய செய்தித்தாள்கள்
பிரான்சின் உருகும் பனிப்பாறைகளுக்கு இடையே 1966 ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்திய செய்தித்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1966 ஆம் ஆண்டு ஏர் இந்தியா போயிங் 707 விமானம் மோன்ட் பிளாங்க் மலையில் மோதியதில் 177 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து நிகழ்ந்த இடத்தில் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு பிறகு 1966 ஆம் ஆண்டில் இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றியைக் குறிப்பிடும் இந்தியாவின் முதல் பெண் பிரதமர் போன்ற தலைப்புச் செய்திகளுடன் நேஷனல் ஹெரால்ட், எகனாமிக் டைம்ஸ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட செய்தித்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஆயிரத்து 350 மீட்டர் உயரத்தில் செயல்படும் லா கபேன் டு செரோ என்ற உணவகத்தின் உரிமையாளர் திமோதி மோட்டி இந்த செய்தித்தாள்களை கண்டுபிடித்துள்ளார். ஒவ்வொரு முறையும் நண்பர்களுடன் பனிப்பாறையில் நடக்கும்போது, விமான விபத்தின் எச்சங்களை பார்ப்பதாக திமோதி தெரிவித்துள்ளார்.
Comments