ரூபாய் நோட்டுகளை தொட அஞ்சி ஆன்லைன் பரிவர்த்தனைக்கு திரும்பிய மக்கள்
இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சாதிக்க முடியாத மின்னணு பரிவர்த்தனை கொரோனாவால் நடைமுறை சாத்தியமாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்புச் செய்த மத்திய அரசு, ஊழல் உள்ளிட்டவற்றை ஒழிக்க ஆன்லைன் பணப் பரிவர்த்தனையை ஊக்குவித்தது.
பல்வேறு வங்கிகளும் மின்னணுப் பரிவர்த்தனையை சேவையைத் தொடங்கியநிலையில் ரூபாய் நோட்டுப் பற்றாக்குறையால் தொடக்கத்தில் அதனைப் பயன்படுத்திய பலரும் பின்னர் ரூபாய் நோட்டுப் புழக்கம் அதிகரித்த பிறகு பணப் பரிவர்த்தனைக்கே திரும்பினர்.
இந்நிலையில் ரூபாய் நோட்டுகளை தொட்டால் கொரோனா பரவக்கூடும் என்ற அச்சத்தில் மக்கள் பலரும் மளிகை, உணவுப் பொருட்கள் காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாங்க ஏப்ரல் முதல் மின்னணுப் பரிவர்த்தனையை நாடி வருவதாக வங்கித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரூபாய் நோட்டுகளை தொட அஞ்சி ஆன்லைன் பரிவர்த்தனைக்கு திரும்பிய மக்கள் #OnlineTransaction | #Corona https://t.co/nup5HW4ZE5
— Polimer News (@polimernews) July 14, 2020
Comments