தவறான செய்திகளால் மக்களிடையே வெறுப்பு பரப்பப்படுகிறது - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பிரதமர் மோடியின் மன் கி பாத் போன்று வீடியோ வாயிலாக தனது கருத்துக்களை மக்கள் உடன் பகிர்ந்து கொள்ள உள்ளதாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் நடவடிக்கைகள் மற்றும், அணுகுமுறை தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் அவர், வாட்ஸ்அப் ஃபார்வர்டுகள் மற்றும் தவறான செய்திகளால் மக்களிடையே வெறுப்பு நிரப்பப்பட்ட கதை பரப்பப்படுவதாக குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும், தவறான தகவல்கள் இந்தியாவைத் துண்டிப்பதாகவும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, தற்போதைய சூழல், வரலாறு மற்றும் நிலவும் நெருக்கடி போன்றவற்றின் உண்மைத்தன்மையை அறிய விரும்புவோருக்காக, தனது எண்ணங்களை வீடியோவில் பகிர்ந்துகொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Comments