நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலிக்கு அயோத்தி பண்டிதர்கள் கடும் கண்டனம்

0 3696

ராமர் நேபாளி என அந்நாட்டு பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு அயோத்தி பண்டிதர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராமர் கோயில் அறக்கட்டளை உறுப்பினர் மகந்த் தினேந்திர தாஸ் (Mahant Dinendra Das) அயோத்தியின் சரயு நதிக்கரையில்தான் ராமர் பிறந்தார் என்றும், சீதா தேவிதான் நேபாளத்தை சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார்.

ராமர் நேபாளத்தை சேர்ந்தவர் என கூறுவது தவறு என்று தெரிவித்த அவர், நேபாள பிரதமரின் கருத்தை கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ராமா தால் அறக்கட்டளை தலைவர் கல்கி ராம் தாஸ் மகராஜ்,   சீனா, பாகிஸ்தான் தூண்டுதலின்பேரில் ஒலி செயல்படுகிறார் எனவும், இன்னும் ஒரு மாதத்தில் அவர் பதவி இழப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இன்னொரு பண்டிதரான மகந்த் பரமஹம்ச ஆச்சார்யா (Mahant Paramhansh Acharya), சர்மா ஒலி நேபாளத்தை சேர்ந்தவர் கிடையாது என்றும், ஆதலால் அவருக்கு நேபாள வரலாறு தெரியாது என்றும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments