அடுத்த 5 ஆண்டுகளில் எச்ஐவி, காசநோய், மலேரியாவால் உயிரிழப்பு அதிகரிக்கும் என ஆய்வில் தகவல்
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் அடுத்த 5 ஆண்டுகளில் எச்ஐவி, காசநோய் மற்றும் மலேரியா பாதிப்புகளால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
தி லான்செட் குளோபல் ஹெல்த் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், கொரோனா பரவல் மற்றும் அதற்கான தடுப்பு நடவடிக்கை காரணமாக, மற்ற நோய்களுக்கு எதிராக எடுக்கப்பட்டு உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாதிக்கப்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, எச்ஐவி பாதிப்பால் 10 சதவீதமும், காசநோயால் 20 சதவீதமும் மற்றும் மலேரியா பாதிப்பால் 36 சதவீதம் வரையிலும் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
NEW—Some low- & middle-income countries (LMICs) could see HIV, TB & malaria deaths increase by as much as 10%, 20% & 36%, respectively, in next 5 years due to health service disruption caused by #COVID19: new modelling research @LancetGH @imperialcollege https://t.co/l71gKRCNsv pic.twitter.com/Eaql3mdkIN
— The Lancet (@TheLancet) July 13, 2020
Comments