மத்தியப்பிரதேசத்தில் மழை நீரில் சுற்றித் திரிந்த மஞ்சள் நிறத் தவளைகள்

0 2910

மத்தியப் பிரதேசத்தில் இணைசேருவதற்காக நிறம் மாறிய தவளைகள் பற்றிய வீடியோ வெளியாகி உள்ளது.

நரசிங்கபூர் பகுதியில் பெய்த மழையில் திடீரென ஏராளமான மஞ்சள் நிறத் தவளைகள் சுற்றித் திரிந்தன.

கண்ணைப் பறிக்கும் நிறத்தில் காணப்பட்ட தவளைகள் குறித்து உயிரியல் ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது, அந்தத் தவளைகள் Indian Bullfrog என்ற வகையைச் சேர்ந்த தவளைகள் என்று அவர்கள் குறிப்பிட்டனர். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மழை பெய்யும் நேரத்தில் பெண் தவளைகளை ஈர்ப்பதற்காக இவை மஞ்சள் நிறத்திற்கு மாறுவதாக அவர்கள் தெரிவித்தனர். இனச்சேர்க்கை காலத்தில் பெண் தவளைகள் பச்சை நிறமாகவும், ஆண் தவளைகள் மஞ்சள் நிறமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments