வாகா எல்லையை திறக்க பாகிஸ்தான் அரசு ஒப்புதல்
இந்தியா - ஆப்கானிஸ்தானிற்கு இடையிலான வர்த்தகத்தை மீண்டும் தொடங்க, மூடப்பட்டுள்ள வாகா எல்லையை திறக்க பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் பாகிஸ்தான் வழியே, பஞ்சாப் பகுதியில் உள்ள வாகா எல்லையை கடந்து இந்தியாவுக்குள் வருவது வழக்கம். இதனிடையே, கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் வாகா எல்லையை பாகிஸ்தான் முற்றிலுமாக மூடியுள்ளது.
இந்நிலையில், வர்த்தக போக்குவரத்தை மீட்டெடுக்க வாகா எல்லையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற ஆப்கானிஸ்தான் அரசின் வேண்டுகோளை ஏற்று, நாளை முதல் வாகா எல்லை திறக்கப்படும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
#Pakistan decides to resume Afghan exports at #WagahBorder crossing#APPNews @ForeignOfficePk @mfa_afghanistan https://t.co/sQqfkKNiDa pic.twitter.com/lyCTbAScDF
— APP ?? #StayHomeSaveLives ?? (@appcsocialmedia) July 13, 2020
Comments