இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடக்கம்

0 1456

இலங்கையில் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு, தொடங்கியது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, ஏப்ரல் 25-ம் தேதி நடைபெற இருந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தல், 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டதால், ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான தபால் வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. இதில், ஆகஸ்ட் 5ம் தேதியன்று தேர்தல் பணியாற்ற உள்ள 7 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், அதிகாரிகள் வாக்களித்து வருகின்றனர்.

இந்த தபால் வாக்குபதிவு 2 கட்டமாக 5 நாட்கள் நடைபெறுகிறது. இத்தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225 ஆகும், அந்நாட்டில் மொத்தமாக ஒரு கோடியே 60 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments