விசாகப்பட்டினத்தில் மருந்து தொழிற்சாலையில் நள்ளிரவில் தீவிபத்து

0 2324

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மருந்து தொழிற்சாலை ஒன்றில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

பரவாடா பகுதியில் ஜே.என் பார்மா நகரில் உள்ள ராம்கி சால்வன்ட்ஸ் அலகில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. தீ விபத்தால் அப்பகுதியில் புகைமூட்டம் சூழ்ந்துள்ள நிலையில், உயிரிழப்பு எதுவும் இல்லை என முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொழிற்சாலையில் இருந்து பலத்த வெடிப்பு சத்தம் கேட்டதாகவும், அதை தொடர்ந்தே தீ ஆலை முழுவதும் பரவியதகாவும் அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். இதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து ஏற்பட்ட வாயுக் கசிவால், கடந்த மே மாதம் இருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments