முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் வரும் 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவ்வப்போது முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், ஒரு சில மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தொடங்கப்படவுள்ள புதிய தொழில்கள், பிறப்பிக்கப்பட வேண்டிய அவசர சட்டங்கள் இருப்பின் அவை தொடர்பாகவும் கலந்தாலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் #TamilNadu | #TNCabinetMeeting | #CMEdappadiPalaniSwami https://t.co/q59XWq3VmA
— Polimer News (@polimernews) July 14, 2020
Comments