ராமர் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் என்ற நேபாள பிரதமரின் பேச்சால் புதிய சர்ச்சை
ராமர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்றும், இந்தியா கலாச்சார அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ராமர் வசித்த அயோத்தி என்பது இந்தியாவில் உள்ள அயோத்தி நகரம் அல்ல என்றும், நேபாளத்தின் பிர்குஞ்ச் மாவட்டத்தில் உள்ள அயோத்தி என்ற சிறு கிராமம் என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நேபாளம், லிபுலேக் கணவாய் உள்ளிட்ட இந்தியப் பகுதிகளை இணைத்து வெளியிடப்பட்ட வரைபடத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், புதிய சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் சர்மா ஒலி பேசியுள்ளார்.
Comments