கணவனுக்கு தவறான உறவு ? நடு ரோட்டில் மனைவி ரகளை

0 18956

மும்பையில் வேறொரு பெண்ணை காரில் ஏற்றிச் சென்றதால், கணவனின் காரை நடுரோட்டில் நிறுத்தி கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்ட மனைவிக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

கணவனின் ரேஞ்ச் ரோவர் காரை சாலையின் நடுவே தடுத்து நிறுத்திய பெண் ஒருவர், காரில் உடன் சென்ற பெண்ணுக்கும் கணவனுக்கும் தவறான உறவு உள்ளதாக கூறி கத்தியதுடன் காரின் கண்ணாடி உடைக்க முயன்றார்.

பின்னர் காரின் முன்பகுதியில் ஏறி அமர்ந்து கூச்சலிட்டார். மேலும், கணவனை வெளியே வரும்படி ஆர்ப்பாட்டம் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் நகர்ந்து சென்ற காரை துரத்திச் சென்று சிக்னலில் மடக்கி பிடித்த மனைவி, கணவனுடன் காரில் சென்ற பெண்ணை கீழே இறக்கி தாக்கியதாகவும், இதையடுத்து தனித்தனி வாகனத்தில் 3 பேரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments