ரஷ்யாவில், 7.34 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ரஷ்யர்கள் வெளிநாடு செல்ல ஜூலை 15 வரை தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஏராளமானோர் கடற்கரைகளில் ஓய்வு நேரத்தை செலவிடுகின்றனர்.
ரஷ்யாவில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு, ரஷ்யர்கள் வருவதற்கு தடை விதித்துள்ளது.
வழக்கமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் ரஷ்யர்கள், இதனால் வேறு வழியின்றி, தங்கள் இல்லங்கள் அருகே உள்ள கடற்கரைகளில் முகக்கவசம் அணியாமலும், தனிநபர் இடைவெளி கடைபிடிக்காமலும், சூர்ய குளியலில் ஈடுபட்டு பொழுதை போக்கி வருகின்றனர்.
Comments