கொரோனா நோய்த் தொற்று 'கிராமப்புற பரவலாக' மாறியுள்ளது - மு.க.ஸ்டாலின்
கொரோனா தடுப்பு, பொருளாதார மீட்சி தொடர்பாக, அரசுக்கு சில முக்கிய ஆலோசனைகளை மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். மருத்துவ, பொருளாதார, தொழில்துறை வல்லுநர்களுடன் விவாதித்து, அதன் அடிப்படையில் ஆலோசனைகளை வழங்கியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அனைவருடைய கையிலும் பணப் புழக்கம் அதிகரிக்கத்' தேவையான நடவடிக்கைகளை எடுத்தல், குறைந்தபட்சம் 5000 ரூபாயாவது ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடியாகப் பணமாக வழங்குதல், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை வருடத்திற்கு 250 நாட்களாக உயர்த்துதல், கொரோனா நெருக்கடி தீரும் வரையிலாவது மாநிலங்கள் தங்களை ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கிக்கொள்ளுதல் உள்ளிட்ட 9 ஆலோசனைகளை, உடனடியாக நிறைவேற்ற வேண்டிய ஆலோசனைகளாக அவர் வழங்கியுள்ளார்.
பொதுவான வருமான கட்டமைப்புத் திட்டத்தை உருவாக்குதல், தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளை அரசு இலவச மருத்துவப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொண்டுவருதல் ஆகிய 2 தொலைநோக்கு பரிந்துரைகளையும் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
கொரோனா நோய்த் தொற்று 'கிராமப்புற பரவலாக' மாறியுள்ளது - மு.க.ஸ்டாலின் | #MKStalin | #COVID19 https://t.co/buHk2z9FYM
— Polimer News (@polimernews) July 13, 2020
Comments