திருப்பதி கோவிலில் பக்தர்கள் காணிக்கை தலைமுடி ரூ. 37 கோடிக்கு ஏலத்தில் விற்பனை

0 9540

புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய  தலைமுடி, 37 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

ஆன்லைன் மூலம் நடைபெற்ற ஏலத் தில் வியாபாரிகள் கலந்து கொண்டு. தலைமுடியை ஏலம் எடுத்தனர். 8 வகையாக பிரித் தெடுக்கப் பட்டிருந்த தலைமுடி, மொத்தம் 22 ஆயிரத்து 200 கிலோ எடை சேகரித்து வைக்கப் பட்டு இருந்தது.

ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக கோவில்கள் மூடப்பட்டு இருந்ததால், பக்தர்கள் மொட் டை போட்டு தலைமுடி காணிக்கை செலுத்த இயலாத நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் நாட்டின் பிற கோவில்களில் தலைமுடி இருப்பு இல்லை என்ற நிலையில், திருப்பதி தேவஸ்தானத்தில்  மட்டும் தலைமுடி இருப்பு இருந்தது.

எனவே, இருப்பு குறைந்து தேவை அதிகரித்த காரணத்தால் வழக்கமாக முப்பது கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை ஆக வேண்டிய தலைமுடி, இம்முறை 37 கோடி ரூபாய் க்கு மேல் விற்பனையானது. " விக்" செய்ய பயன்படுத்தப்படும் இந்த முடிகள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இங்கிலாந்து நாடு மட்டும் ஆண்டொன்றுக்கு 400 கோடி ரூபாய் அளவுக்கு தலைமுடியை இறக்குமதி செய்கிறது. தலைமுடி இறக்குமதியில் அமெரிக்கா முதலிடத் திலும், சீனா 2 ஆவது இடத்திலும் உள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments