இருசக்கர வாகனம், சைக்கிள் மீது கார் மோதி விபத்து

0 2519
புதுச்சேரி அருகே வடமங்கலத்தில் இருசக்கர வாகனம், சைக்கிள் ஆகியவற்றின் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 3 பேர் தூக்கி வீசப்பட்டதில் இருவர் உயிரிழந்தனர்.

புதுச்சேரி அருகே வடமங்கலத்தில் இருசக்கர வாகனம், சைக்கிள் ஆகியவற்றின் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 3 பேர் தூக்கி வீசப்பட்டதில் இருவர் உயிரிழந்தனர்.

நெஞ்சைப் பதற வைக்கும் அந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. விழுப்புரத்தில் இருந்து வந்த கார் வடமங்கலத்தில் வந்தபோது சாலையின் முன்புறம் சென்ற வாகனத்தை முந்துவதற்கு வலப்புறம் அதிவேகமாக ஏறிச் சென்று எதிரே வந்த இருசக்கர வாகனம், ஆகியவற்றின் மீது மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த கலிதீர்த்தாள்குப்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவியும், மிதிவண்டியில் வந்த பங்கூரைச் சேர்ந்த ஒருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரும், சைக்கிளில் வந்த ஒருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த பெண்ணுக்குப் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வில்லியனூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments