எண்ணெய் குழாய்களை நெடுஞ்சாலையோரம் பதிக்க வேண்டும் - கொங்கு ஈஸ்வரன்

0 1483

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய் குழாய்களை வயல்வெளிகளில் பதிக்காமல் நெடுஞ்சாலைகள் வழியாக எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாய நிலங்களை கையக்கப்படுத்தி கோவை இருகூரிலிருந்து கர்நாடகா வரை எண்ணெய் குழாய் பதிக்கும் முயற்சியில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் நெடுஞ்சாலை ஓரம் எண்ணெய் குழாய்களை பதிக்க திட்டம் வகுத்து தர தமிழக அரசுக்கு  ஈஸ்வரன் கோரி உள்ளார்.

எண்ணெய் குழாய் பதிப்பிற்கு எதிராக தற்போது நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் பெருந்திரள் மக்கள் போராட்டமாக மாறுவதற்கு முன் மாநில அரசு விழித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments