எல்லைப்பகுதி வரைபடங்கள் குறித்து சீனாவிடம் இந்தியா வலியுறுத்த முடிவு
எல்லையில் இருந்து சீன படைகள் முழுமையாக வாபஸ் பெறப்பட்டு, இந்திய படைகள் தங்களது பழைய ரோந்து முகாம்களுக்கு திரும்பிய பின்னர், மேற்கு எல்லைப் பகுதிகள் குறித்த வரைபடங்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள வேண்டும் என சீனாவை வலியுறுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் எல்லைப்பகுதிகள் எந்த நாட்டுக்கு உரியவை என்பது தெளிவுபடுத்தப்படுவதுடன், இனிமேல் ரோந்துப் பணிகளை எந்த தடங்கலும் இன்றி நடத்தவும் அவை உதவும் என இந்தியா கருதுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் மேற்கு எல்லை வரைபடங்களை அளிக்க சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது. எல்லை பிரச்சனை குறித்து 22 கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடந்த பிறகும் வரைபடங்களை அளிக்கவோ, கட்டுப்பாட்டு எல்லை குறித்த ஐயங்களை தெளிவு படுத்தவோ சீனா தயாரா முன்வராமல் உள்ளது. மத்திய எல்லை தொடர்பான வரைபடங்களை மட்டுமே அது இதுவரை அளித்துள்ளது.
Comments