காலியாக உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது?

0 5103

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

குடியாத்தம் தொகுதி எம்எல்ஏ காத்தவராயன், திருவெற்றியூர் தொகுதி எம்எல்ஏ கே.பி.பி.சாமி ஆகியோர் மறைவைத் தொடர்ந்து, இரண்டு தொகுதிகளும் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் மார்ச் 1ஆம் தேதி அறிவித்தது. எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் மறைந்ததையடுத்து, அவருடைய  சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியும்  காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தேர்தல் ஆணைய விதிப்படி வாக்குப்பதிவு  இயந்திரங்கள் முதற்கட்ட சோதனைகளை முடித்து தயார் நிலையில் இருப்பதாகவும்,  வாக்குப்பதிவு இயந்திரங்களை இடைத்தேர்தலுக்கு தயார் செய்வது தொடர்பாக கடந்த வாரம் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாவும் சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments