ஹாங்காங் மக்கள் 10,000 பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க ஆஸி. திட்டம்

0 2153

ஹாங்காங் மக்கள் 10 ஆயிரம் பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க ஆஸ்திரேலியா அரசு முடிவு செய்துள்ளது.

சீனாவின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தால் பாதிக்கப்படும் ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் தந்து குடியுரிமை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே பல்வேறு காரணங்களுக்காக தங்கி இருக்கும் 10 ஆயிரம் ஹாங்காங் மக்களுக்கான விசா கெடுவை 5 வருடம் வரை நீட்டிப்பதாகவும், இதன் மூலம் அவர்களுக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஸ்காட் மாரிசன் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments