நேபாளம் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கில் சிக்கி மேலும் 10 பேர் உயிரிழப்பு
நேபாளத்தின் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி மேலும் 10 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் பருவமழையால் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளபெருக்கு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், தலைநகர் காத்மாண்டு அருகே கடந்த வாரம் பெய்த கனமழையால் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மியாக்தி மாவட்டம் இதில் பெருமளவில் பாதிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மியாக்டி மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments