விமானத்தில் பயணம் செய்வோருக்கான விதிமுறையில் திடீர் மாற்றம்
கொரோனாவில் இருந்து குணமானோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை முன்னிட்டு விமானத்தில் பயணம் செய்வோருக்கான விதிமுறையில் திடீர் மாற்றமும், படிவத்தில் திருத்தமும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய சிவில் விமான போக்குவரத்து துறை மூத்த அதிகாரிகள், விமான பயண நாளுக்கு 2 மாதங்கள் முன்பாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்ற சுய அறிவிப்பு செய்யும் விதிமுறையில், 2 மாதங்கள் என்ற கால கட்டம் 3 வார காலமாக குறைக்கப்பட்டுள்ளது என்றனர்.
இதன்படி கடந்த 3 வாரங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்ற சுய அறிவிப்பை விமான பயணிகள் செய்ய வேண்டும் என்றும் இதை குறிப்பிடும் வகையில் உரிய படிவத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
மேலும் இந்த விதிமுறையின் கீழ்வருவோர், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டபோது மருத்துவமனைகளில் வழங்கிய ‘டிஸ்சார்ஜ்’ சான்றிதழை காட்டினால் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறினர்.
விமானத்தில் பயணம் செய்வோருக்கான விதிமுறையில் திடீர் மாற்றம் #Airlines | #Covid19 https://t.co/Q6HeA3hj3a
— Polimer News (@polimernews) July 13, 2020
Comments