நடிகர் அமிதாப் பச்சன் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல்

0 2421

பிரபல நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவர் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து லேசான கொரோனா அறிகுறியுடன், மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அமிதாப்பின் உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.அபிஷேக் பச்சனும் தாம் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசோதனைகளின் போது ஐஸ்வர்யா ராயும் அவர் மகள் ஆராதியாவும் நோய்த் தொற்றுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சனுக்கும் மகள் ஸ்வேத்தாவுக்கும் அவரின் மகள் நவ்யாவுக்கும் கொரோனா தொற்று இல்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்..

இந்நிலையில் மும்பையில் அமிதாப் குடும்பத்திற்கு சொந்தமான நான்கு பங்களாக்களில் பணியாற்றி வந்த 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். தொடர்ந்து நேற்று 4 பங்களாக்கள் சீல் வைக்கப்பட்டன.
பங்களாக்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments