ஆன்லைன் வகுப்பில் அசத்தும் கேரள பள்ளி ஆசிரியர்கள்
கேரள மாநிலம் மலப்புரத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பில், ஆகுமெண்டல் ரியாலிட்டி எனப்படும் புனைமெய்யாக்கத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஆசிரியரின் முயற்சிக்கு பராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
மூர்கனாட் பகுதியில் உள்ள பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் ஷ்யாம் என்பவரே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம், நடத்தப்படும் பாடங்களுக்கு ஏற்றவாறு வகுப்பறைக்கு உள்ளேயே சூரிய மண்டலம், பசு, யானை, மழைபொழிவு போன்ற பிம்பங்களை உருவாக்கி, அதுதொடர்பான விவரங்களை மாணவர்களுக்கு எளிதாக புரிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஆன்லைன் வகுப்புகள் என்பது மந்தமான செயல் எனவும், அதில் மாணவர்களின் கவனத்தை ஈர்க்க அதிக முயற்சி தேவை எனவும் ஆசிரியர் ஷ்யாம் தெரிவித்துள்ளார்,
Comments