அமெரிக்காவிடம் இருந்து 72,000 தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகளை வாங்க இந்தியா திட்டம்
அமெரிக்காவிடம் இருந்து சுமார் 72 ஆயிரம் தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்லையில் சீனா உடனான பதற்றம் நீடித்து வரும் சூழலில், ரஷ்யாவின் கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சி தொடர்ந்து தாமதம் ஆகி வருகிறது. இதனிடையே, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் சிக் சாவர் நிறுவனத்திடமிருந்து, 500 மீட்டர் ரேஞ்ச் திறன்கொண்ட 72 ஆயிரம் துப்பாக்கிகள் 647 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியாவில் கொள்முதல் செய்யப்பட்டன.
இதைதொடர்ந்து, இரண்டாவது கட்டமாக சுமார் 72 ஆயிரம் தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகளை வாங்க, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments