ரூ.22,500 கோடியாக உயரும் ஆன்லைன் மளிகை வர்த்தகம்..!
நடப்பு ஆண்டில் ஆன்லைன் வாயிலாக நடக்கும் மளிகை வர்த்தகம் சுமார் 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என்ற அளவை எட்டும் என ஸ்பென்சர் சில்லறை வர்த்தக வணிக தலைவர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார்.
2019-20 ஆம் ஆண்டுக்கான நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையில் இடம்பெற்றுள்ள பங்குதாரர்களுக்கான உரையில் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். நடப்பு ஆண்டு எதிர்பார்க்கப்படும் ஆன்லைன் மளிகை வர்த்தகம், கடந்த ஆண்டை விடவும் 76 சதவிகிதம் அதிகமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் மளிகை டெலிவரி அதிகரித்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது என குறிப்பிட்டுள்ள அவர், ஸ்மார்ட் போன்களின் அதிகரித்து வரும் பயன்பாடு, குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் நெட் இணைப்பு உள்ளிட்டவற்றால், மக்கள் ஆன்லைன், போன் போன்றவற்றின் வாயிலாக பொருட்களை வாங்குவதை விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் 90 சதவிகித கடைகளை ஸ்பென்சர் திறந்து விற்பனை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments