ஏர்டெல், வோடாபோன் ஐடியா நிறுவனங்களின் ப்ரிமீயம் திட்டங்களுக்கு டிராய் தடை
ஏர்டெல், வோடாபோன் ஐடியா செல்பேசி நிறுவனங்களின் ப்ரிமீயம் திட்டங்களுக்கு மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (Trai) தடை விதித்துள்ளது.
பிளாட்டினம் என்ற புதிய திட்டத்தை ஏர்டெல் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. இதேபோல் வோடாபோன் ஐடியா நிறுவனம் ரெட் எக்ஸ் (RedX) என்ற பெயரில் நவம்பர் முதல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களில் அதிவேக டேட்டா சேவை அளிக்கப்படும், சில சேவைகளில் முன்னுரிமை கிடைக்கும் எனவும் அறிவித்தன.
இந்நிலையில், டிராய் அனுப்பிய கடிதத்தில், ப்ரிமீயம் திட்டங்களால், அதில் சேராத மற்ற சந்தாதாரர்களுக்கான சேவை தரம் பாதிக்கப்படும் எனவும், ஆதலால் உடனடியாக அந்தத் திட்டங்களை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ப்ரிமீயம் திட்டத்தில் சேர்ந்தோரின் நலன்களை பாதுகாக்கும்படியும் டிராய் கூறியுள்ளது. டிராயின் உத்தரவுக்கு வோடாபோன் ஐடியா ஆச்சரியத்தை தெரியபடுத்திய நிலையில், ஏர்டெல் கருத்து வெளியிடவில்லை.
Comments