இந்திய நிலப்பகுதி அனைத்தும் நமது நாட்டிடமே உள்ளது - பிஎஸ்எப் டைரக்டர் ஜெனரல் தேஷ்வால்
இந்திய நிலப்பகுதி அனைத்தும் நமது நாட்டிடமே இருப்பதாக இந்தோ- திபெத் எல்லைக் காவல் படை மற்றும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (ITBP and BSF) (Indo-Tibetan Border Police) டைரக்டர் ஜெனரல் சுர்ஜித் சிங் தேஷ்வால் தெரிவித்துள்ளார்.
கால்வன் பள்ளத்தாக்கில் நேரிட்ட தகராறில் இந்தியா, சீனா தரப்பில் உயிரிழப்புகள் நேரிட்டதையடுத்து இருநாடுகளும் படைகளை குவித்ததால், போர் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின்போது இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்து விட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தது.
இந்நிலையில் ஹரியானா மாநிலம் குருகிராமில் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய தேஷ்வால், இந்தியா-சீனா எல்லை நிலவரம் படிப்படியாக மேம்பட்டு வருவதாகவும், ராணுவ மற்றும் ராஜ்ஜீய ரீதியிலான பேச்சுவார்த்தைகளிலும், இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் இருநாடுகளும் ஈடுபட்டிருப்பதாக கூறினார். நமது நாட்டுக்கு சொந்தமான நிலபகுதியை எத்தகைய சூழ்நிலைகளிலும் பாதுகாக்கும் வல்லமை இந்தியாவிடம் உள்ளதாகவும் தேஷ்வால் குறிப்பிட்டார்.
Comments