மோட்டார் சைக்கிள் பறிமுதல்: இளைஞர் தற்கொலை முயற்சி

0 5940
போலீசாரால் மோட்டார் சைக்கிள் பறிமுதல் - இளைஞர் தற்கொலை முயற்சி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்ததால்  விரக்தியடைந்து மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற இளைஞர் பலத்த காயத்துடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், அண்ணாநகரை சேர்ந்த முகிலன்  மோட்டார் சைக்கிளில் ஓஏஆர் தியேட்டர் சர்க்கிள் பகுதியில் வந்துள்ளார். அப்போது ரோந்து  போலீசார்,  மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர். வாகனத்தை திருப்பி கேட்டபோது திருப்பி அளிக்காததால், வீட்டுக்கு சென்று கேனில் மண்ணெண்ணெயை எடுத்து வந்து, அதே பகுதியில் உடலில் ஊற்றி, தீயை பற்ற வைத்து முகிலன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில் 90 சதவீத தீக்காயம் அடைந்த நிலையில், அவர் மீது போர்வையை போட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டனர். தகவலின்பேரில் எஸ்.பி. விஜயகுமார், முகிலனை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தார். இச்சம்பவம் குறித்தும் எஸ்.பி. தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments