அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாதிப்பு, நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் நலம் விசாரிப்பு

0 4684

கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனிடம், நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு சனிக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் குணம் பெற வேண்டி பிரார்த்திப்பதாக அரசியல் பிரமுகர்கள், திரை மற்றும் கிரிக்கெட் பிரபலங்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோரும் பிரார்த்தனை செய்வதாக ட்விட்டரில் பதிவிட்டனர். அதேபோல் நடிகர்கள் கமல்ஹாசன், மோகன்லால், அக் ஷய் குமார், போனி கபூர், துல்கர் சல்மான், உள்ளிட்டோரும் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமது நண்பரான அமிதாப் பச்சனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த், அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments