ம.பி.,யில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா

0 2039

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்து விட்டு, முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில் பாஜக வில் சேர்ந்தார். சாத்தர்பூர் மாவட்டம் படா மெல்ஹேரா தொகுதி (Pradyumna Singh Lodhi) உறுப்பினராக கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பாஜகவால் மட்டுமே தமது தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை நடத்த முடியும் என்பதால், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் சேர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த மார்ச்சில் ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 ராஜினாமா செய்ததை அடுத்து கமல் நாத் தலைமையிலான அரசு கவிழ்ந்து, மார்ச் 23 ஆம் தேதி சிவராஜ் சிங் சவுகான் 4 ஆவது தடவையாக முதல்வரானார்.

தற்போது மேலும் ஒரு எம்எல்ஏவின் ராஜினாமாவால் சட்டமன்றத்தில் காங்கிரசின் பலர் 91 ஆக குறைந்துள்ளது. பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments