விகாஸ் துபே என்கவுன்டர் - விசாரணை கமிஷன் அமைப்பு..!
கான்பூர் ரவுடி விகாஸ் துபே, தப்பி ஓட முயற்சித்த போது போலீஸ் என்கவுன்டரில் சுட்டக் கொல்லப்பட்டது குறித்து ஒரு நபர் விசாரணை கமிஷன் விசாரணைக்கு உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
ரவுடி விகாஸ் துபே நடத்திய கொடூர குற்றங்கள் குறித்து விசாரிக்க நேற்று சிறப்பு புலன் விசாரணை குழு அமைக்கப்பட்டது. மூத்த ஐஏஎஸ் அதிகாரி மற்றும் இரண்டு போலீஸ் அதிகாரிகள் இந்த புலன்விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், இன்று, ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரது தலைமையில் என்கவுன்டர் பற்றிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜெயினியில் கைது செய்யப்பட்டு கார் மூலம் கான்பூர் கொண்டு வரப்படும் வழியில், விகாஸ் துபே தப்பிச் செல்ல முயன்றதாகவும், அப்போது என்கவுன்டர் நட்த தாகவும் போலீஸ் தரப்பு கூறுகிறது. ஆனால் பயங்கர ரவுடியான அவனுக்கு ஏன் கையில் விலங்கு மாட்டவில்லை என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
Comments