நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா..!

0 9631

பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது மருமகளும், அபிஷேக்கின் மனைவியுமான நடிகை ஐஸ்வர்யா ராய்’க்கும், அவர்களது மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகர் அமிதாப் பச்சனுக்கு சனிக்கிழமை இரவு திடீரென லேசான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தனிமைபடுத்தி அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 77 வயதான அமிதாப் பச்சனின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்த தகவலை தனது ட்விட்டர் பதிவு மூலம் அமிதாப் பச்சனும் உறுதி செய்தார். தொடர்ந்து தனக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அபிஷேக் பச்சனும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அபிஷேக்கின் மனைவியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய்’க்கும், அவர்களது 8 வயது மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.

அதே சமயம் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு தொற்று இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். அடுத்த சில நிமிடங்களில் அந்த பதிவை நீக்கிவிட்டார். இதனிடையே ஐஸ்வர்யாவுக்கும், மகள் ஆராத்யாவுக்கும் அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும், இதனால் அவர்கள் வீட்டிலேயே தனிமைபடுத்தி கண்காணிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments