என்எல்சியில் பாய்லர் வெடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14ஆக உயர்வு

0 2257

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஒன்றாம் தேதி 2வது அனல் மின் நிலையத்தின் 5வது அலகில் திடீரென பாய்லர் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 17 பேர், நெய்வேலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்களில் 16 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இவர்களில் கடந்த 3 ஆம் தேதி ஒருவரும் 5 ஆம் தேதி 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

6 ஆம் தேதி மேலும் 3 பேரும் 7 ஆம் தேதி ஒருவரும் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், என்எல்சியின் நிரந்தர தொழிலாளியான சுரேஷ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments