திருப்பதி கோவில் திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் ரூ.16.73 கோடி உண்டியல் காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோவில் மீண்டும் திறக்கப்பட்ட பின் ஒரு மாதத்தில் 16 கோடியே 73 லட்ச ரூபாயும் 2 கிலோ தங்கமும் உண்டியலில் காணிக்கையாகக் கிடைத்துள்ளன.
திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தானச் செயல் அலுவலர் அனில் சிங்கால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுத் திருப்பதி கோவில் வழிபாட்டுக்குத் திறக்கப்பட்ட பின் ஒரு மாதத்தில் இரண்டரை லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகத் தெரவித்தார்.
இந்த ஒரு மாதத்தில் உண்டியலில் 16 கோடியே 73 லட்ச ரூபாயும், 2 கிலோ தங்கமும் காணிக்கையாகக் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்கள், காவலர்கள் என மூவாயிரத்து 569 பேருக்குப் பரிசோதனை செய்ததில் 91 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
திருப்பதி கோவில் திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் ரூ.16.73 கோடி உண்டியல் காணிக்கை #Tirupati https://t.co/LUdjU9b7Ue
— Polimer News (@polimernews) July 12, 2020
Comments