கிழக்கு லடாக்கில் படைவிலக்கப் பகுதியா? - ராணுவ வட்டாரங்கள் மறுப்பு...
கிழக்கு லடாக்கில் படைவிலக்கப் பகுதி இல்லை என்றும், சீனாவுடனான மோதலைத் தவிர்க்க ரோந்து செல்வது மட்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு லடாக்கில் இந்தியாவுக்குச் சொந்தமான கால்வனில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக் கொண்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இதையடுத்து இருநாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் முன்பிருந்த நிலையைப் பராமரிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி சீனப் படையினர் 2 கிலோமீட்டர் தொலைவு பின்வாங்கியுள்ளனர். இந்தியப் படையினரும் 600 மீட்டர் தொலைவுக்குப் பின் வாங்கியுள்ளனர். இந்தப் பின்வாங்கலைப் படைவிலக்கம் எனக் கருத முடியாது என்றும், சீனப் படையினருடனான மோதலைத் தவிர்க்கச் சில பகுதிகளில் ரோந்து செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments