சித்த மருத்துவத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 42 பேர் குணம்
சென்னை வியாசர்பாடியில் சித்த மருத்துவ முறைப்படி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 42 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 208 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 66 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு சித்த மருத்துவத்தோடு யோகா, பிராணயாமம், முத்திரை, வர்ம பயிற்சி என சிறப்பு ஆசன பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. நெல்லிக்காய் சாறு, கபசுரக் குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் திறன் கொண்ட மூலிகை குடிநீரும் வழங்கப்படுகிறது.
சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை பெறுபவர்களுக்கு 2 அல்லது 3 நாட்களிலேயே தொற்று அறிகுறிகள் மறைந்துவிடுவதாக கூறும் மருத்துவர்கள், கண்காணிப்புக்காக 10 நாட்கள் வரை மருத்துவமனையில் வைத்திருந்து டிஸ்சார்ஜ் செய்வதாக தெரிவித்துள்ளனர்.
சித்த மருத்துவத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 42 பேர் குணம் #SiddhaMedicine | #CoronaTreatment | #CoronaVirus | #CoronaChennai https://t.co/lmPVL4ehEn
— Polimer News (@polimernews) July 12, 2020
Comments