அச்சுறுத்தும் கொரோனா நாளுக்கு நாள் உயரும் பாதிப்பு
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரசு ஊழியர் ஒருவர் உட்பட 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். ஓமந்தூரார் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனையில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயது முதியவரும் உயிரிழந்தார். இது தவிர தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். உயிரிழந்த 25 பேரும் 50 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 202 பேருக்கு கொரொனா தொற்று உறுதியானதால், அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6623 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் மேலும் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 418ஆக அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1732 ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 761 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 152 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்தை கடந்தது.
Overall zone-wise detailed status of COVID-19 cases in #Chennai.#Covid19Chennai #GCC #chennaicorporation pic.twitter.com/soCSwE7AUJ
— Greater Chennai Corporation (@chennaicorp) July 12, 2020
Comments