பல்ஸ் ஆக்சிமீட்டரை அதிக அளவில் பயன்படுத்த முதலமைச்சர் உத்தரவு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
கொரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டரை அதிக அளவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவைக் கணக்கிட பிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டர் என்ற கருவி பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இக்கருவியை அதிக அளவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முதலமைச்சர் உத்தரவிட்டதால், 43 ஆயிரம் கருவிகள் கொள்முதல் செய்ய ஆணை வெளியிடப்பட்டு, இதுவரை 23 ஆயிரம் கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள், மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் ஆகியோரின் இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவைக் கண்காணிக்க பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவி அதிக அளவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Hon’ble @CMOTamilNadu ordered procurement of 43,000 Pulse Oximeter that will be used to assess the oxygen level of patients in #Covid fever clinics, care centers & wellness centers. The procurement is processed through #TNMSC. #TNGovt #Vijayabaskar pic.twitter.com/fVSe33386t
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) July 12, 2020
Comments