மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டம் தேவை - அமைச்சர் கிரிராஜ் சிங்

0 2443

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் நேற்று சர்வதேச மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அவர் வீடியோ மூலம் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் இந்தியா,  வளர்ந்த நாடுகளுடன் இணையாக நிற்க விரும்பினால் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைத்து மக்களுக்கும் மதங்களுக்கும் சமமாக பொருந்தக் கூடிய ஒரு கடுமையான மக்கள்தொகை கட்டுப்பாடு சட்டம் தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார். தமது இந்த கருத்தை  நாட்டின் வளர்ச்சி மற்றும் வளங்களின் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்க வேண்டும் எனவும் கிரிராஜ் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments