பாக்ஸ்கான் ஆலையை விரிவாக்கத் திட்டம், 6000 பேருக்கு வேலைவாய்ப்பு
பாக்ஸ்கான் நிறுவனம் திருப்பெரும்புதூரில் உள்ள ஆலையை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளதால் சீனாவில் இருந்து படிப்படியாக வெளியேற உள்ளதாகக் கூறப்படுகிறது.
தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் அமெரிக்காவின் ஆப்பிள், சீனாவின் சியோமி நிறுவனங்களுக்காக செல்போன் உதிரிப் பாகங்களைத் தயாரித்து வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் சென்னை அருகே திருப்பெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையை ஏழாயிரத்து 520 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் கூடுதலாக ஆறாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வணிகப் போட்டி உள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனம் வலியுறுத்திக் கூறியதால் சீனாவில் உள்ள ஆலைகளில் உற்பத்தியைப் படிப்படியாகக் குறைக்க பாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவிலேயே ஸ்மார்ட்போன்களைத் தயாரிப்பதால் இறக்குமதி வரி மிச்சமாவதுடன் விலையும் குறைய வாய்ப்புள்ளது.
Comments