உலகம் முழுவதும் ஒரே நாளில் 2.14 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
உலக அளவில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 14 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று கண்டுபிடிக்கப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 28 லட்சத்து 33 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு நாடுகளில் 5 ஆயிரம் பேர் மரணித்ததால் இதுவரை 5 லட்சத்து 67 ஆயிரம் பேர் கொரேனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த சில தினங்களாக உயிர்ப்பலி உச்சத்தில் இருந்த பிரேசிலில் நேற்று இறந்தோர் எண்ணிக்கை 968 ஆகக் குறைந்துள்ளது.
இதற்கு அடுத்ததாக 732 பேர் இறந்ததால் அமெரிக்காவும், 665 பேருடன் மெக்ஸிகோவும், 543 அடுத்த இடத்தில் இந்தியாவும் உள்ளன. இதேபோல் ரஷ்யா, பெரு, சிலி, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஈரான் மற்றும் கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் 100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 75 லட்சத்தை நெருங்கியுள்ளது. தற்போது வரை 48 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் அவர்களில் 58 ஆயிரம் பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
24-hour coronavirus update:
— Reuters (@Reuters) July 10, 2020
?? U.S. cases rise by record 60,565 in single day, deaths increasing
?? Australia restricts number of citizens returning home
? WHO calls for more evidence on airborne transmission https://t.co/AIkIfb2qKQ pic.twitter.com/h2gMwclomO
Comments